உ.பி.,யில் 74 மாவட்டங்களில் நடந்த மண்டல பஞ்சாயத்து தேர்தலில் 635 இடங்களில் பா.ஜ.க மற்றும் அப்னா தளம் கட்சிகள் கைப்பற்றி உள்ளன. இதில், பா.ஜ.க வேட்பாளர்கள் 334 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் கொள்கைக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் இது’ என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்தார். இத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி 70 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.