பயங்கரவாத ஆதரவு அரசு ஊழியர்கள் நீக்கம்

ஜம்மு காஷ்மீர் அரசு, அதன் 11 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. அவர்கள் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்தது, நிதயுதவி செய்தது, அதனை பரப்புவது, ரகசியத் தகவல்களை பயங்கரவாதிகளுக்கு அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முக்கியமாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் நிறுவனர் சையத் சலாஹுதீனின் மகன்களான சையத் அஹ்மத் ஷகீல் மற்றும் ஷாஹித் யூசுப் ஆகியோரும் பயங்கரவாத நிதியுதவியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதால் அவர்களும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் இரண்டு கான்ஸ்டபிள்கள், மின் துறை ஆய்வாளர், சுகாதாரத்துறை ஊழியர், வேளாண்மை அலுவலர், இரண்டு ஆசிரியர்கள் அடங்குவர்.