கர்ல் எட்வர்ட்டுக்கு தடை

கர்ல் ராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் நியூசிலாந்தை சேர்ந்த கர்ல் எட்வர்ட் ரைஸ். இவர் பாரதம் உட்பட பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இவர் டெல்லியை சேர்ந்த மனீஷா என்ற பெண்ணை 2019ல் திருமணம் செய்துகொண்டார். அவரது யூடியூப் சேனலில் பாரதம் பற்றி மிகவும் மோசமான கருத்துகளை உருவாக்கும் வீடியோக்கள் பல பதிவிட்டார். மேலும், விசா விதிகளை மீறி, குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நடைபெற்ற வன்முறை போராட்டத்திலும் பங்குபெற்றார். கடந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய எட்வர்ட் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். பின்னர், பாரதம் வர, தனது விசாவை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தில் எட்வர்ட் விண்ணப்பித்தார். ஆனால், கர்ல் எட்வர்ட் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று, அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பில் இருந்தது போன்ற காரணங்களால் கர்ல் எட்வர்ட்டிற்கு இந்திய விசா உள்துறை அமைச்சகத்தால் மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்தியாவிற்குள் நுழைய 1 ஆண்டு தடை விதித்துள்ளது. கர்ல் எட்வர்ட்டின் விசா ரத்தை எதிர்த்து அவரின் மனைவி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.