பொது சிவில் சட்டம் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொது சிவில் சட்டம் தொடர்பான விசாரணையின்போது,“நவீன இந்திய சமூகம் படிப்படியாக ஒரேவிதமானதாக மாறி, மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து வருகிறது. மேலும் இந்த மாறிவரும் முன்மாதிரிகளைப் பார்க்கும்போது, ஒரு பொதுவான சிவில் சட்டம் தேவையாக உள்ளது. நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். இதை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங் தெரிவித்துள்ளார்.