கோவேக்சின் அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. கோவேக்சினின் நோய் எதிர்ப்பு திறன் மிக அதிகமாக உள்ளதாக கூறிய, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், டெல்டா வைரஸுக்கு எதிராக இதன் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார். கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற, ஜூன் 23ம் தேதி, ஜெனிவாவில், உலக சுகாதார நிறுவன அதிகாரிகளுடன் பாரத் பயோடெக் நிறுவன அதிகரிகள் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். அவசர கால பயன்பாட்டிற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளின் செயல் திறன்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இவற்றைப் பற்றி மேலும் அதிக தகவல்களை சேகரிப்பதாகவும் செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். மேலும், மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை என்று கூறிய செளமியா சுவாமிநாதன், முதல் கட்ட தடுப்பூசி விநியோகத்தை அனைத்து நாடுகளும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.