கூகுளுக்கு எதிராக வழக்குகள்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு பயனாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். மற்ற தளங்களில் உள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் செயலிகளை தங்கள் தொகுப்பில் இணைக்க நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இது தொழில் போட்டி மற்றும் நேர்மையாக தொழில் செய்வதற்கு எதிரானது. இந்த நடவடிக்கைகள் மூலமாக கூகுள் ஆதிக்கம் செலுத்துகிறது. செயலி பயனாளிகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அதிக தொகை வசூலிக்கப்படுகிறது என கூகுள் நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்காவின் நியூயார்க், வடக்கு கரோலினா உட்பட, 36 மாகாணங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.