பாரதத்தில் பெரும்பான்மையான மாநிலங்கள் கொரோனாவின் இரண்டாவது அலை நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டு வருகின்றன. கொரோனாவை கையாள்வதில் உத்தரபிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிவேகமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளன. ஆனால், கேரளாவில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி 8,000 முதல் 15,000 வரை தொடர்ந்து பதிவாகி வருகிறது. கடந்த ஒரு வருடமாக ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை. விகிதாச்சார அடிப்படையில் அடுத்த இடத்தில் மகாராஷ்டிர அரசு உள்ளது.