ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய விமான தளமான பக்ராமில் இருந்து கடந்த ஞாயிறு அன்று இரவோடு இரவாக ஆப்கன் ராணுவத்துக்குக் கூட முறைப்படி தெரிவிக்காமல், அமெரிக்க ராணுவம் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறியது என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியதை காலை 7:00 மணிக்குதான் ஆப்கன் ராணுவம் அறிந்து கொண்டது. ஆப்கன் ராணூவ பயன்பாட்டிற்காக, அங்கு ஒரு சில சிறிய ரக ஆயுதங்கள், உணவு பொருட்கள் என சிலவற்றை மட்டுமே அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்றது. அவர்கள் வெளியேறிய பின்னர், ஆப்கானிய ராணுவம் விமான தளத்தை கட்டுப்பாட்டில் எடுக்காததால் கொள்ளையர்கள் அந்த வளாகத்தை கொள்ளையடித்தனர். சர்வதேச அளவில், அமெரிக்காவின் இந்த செயல்பாடு தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.