உலக சுகாதார நிறுவனம் தனது ‘வேரியண்ட் ஆப் இன்ட்ரஸ்ட்’ பட்டியலில் புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் திரிபு ஒன்றை சேர்த்துள்ளது. இதற்கு லாம்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெருவில் கண்டறியப்பட்ட லாம்டா வகை தற்போது உலக அளவில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வகை திரிபு, டெல்டாவை காட்டிலும் ஆபத்தானது என்றும் கொடிய தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லாம்டா திரிபு பாரதத்தில் கண்டறியப்பட வில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.