ஹிந்து முன்னணி புகார்

ஹிந்து முன்னணி வேலூர் கோட்டப் பொறுப்பாளர் மகேஷ், வேலுார் எஸ்.பி.,யிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘ஹிந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள், வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டில் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் பரவி வருகிறது. அதில், பெண்களையும், தேசிய கொடியையும்கூட அவமதித்துள்ளனர். அந்த வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். அக்குழுவில் 236 பேருக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். அந்த அட்மின் அலைபேசி எண்களை பார்த்தால், வெளிநாட்டை சேர்ந்தது போல் உள்ளது. இதனால், பேர்ணாம்பட்டில் பாகிஸ்தான் நாட்டிற்கு தொடர்புடைய குழு இயங்குவதாக சந்தேகம் எழுகிறது. இவர்கள், தேச விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். மனு மீது விசாரணை செய்யவும், சம்பந்தப்பட்ட வாட்ஸ்ஆப்பை கண்காணிக்கவும் எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.