ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை நடிகர் கார்த்தி நேரில் சென்று சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசை, ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு பேசினார். அவரது இந்தப் பேச்சிற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவ்வகையில், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், தனது டுவிட்டர் கணக்கில், நடிகர் கார்த்திக்கு சில கேள்வியை முன்வைத்துள்ளார். அதில், “நடிகர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மக்கள் அவர்களை கூத்தாடி என்று அழைத்தால் அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றுதான். நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? அவரைப் போன்ற நன்கு படித்த மனிதனுக்கு புரிதல் மிகக் குறைவு shame,” எனக் குறிப்பிட்டுள்ளார்.