திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியில் தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி வரும் பால் சந்திரமோகன், வகுப்பில் ஆபாசமாக நடப்பது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது, மாணவியரை தன் அறைக்கு வரச் சொல்லி ஆபாசமாக பேசுவது என ஒழுக்கக்கேடாக நடந்துள்ளார். இது குறித்து, முதலாம் ஆண்டு எம்.ஏ படிக்கும் ஐந்து மாணவியர், கடந்த மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து பால் சந்திரமோகன், பணி நீக்கம் செய்யப்பட்டார். மாணவியரின் புகார் குறித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன்படி, பேராசிரியர் பால் சந்திரமோகனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.