மாணவரை திட்டிய எம்.எல்.ஏ

கேரளாவில் கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நடிகர் முகேஷ். இவர் தமிழில், ஐந்தாம்படை, ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வந்த ஒரு அலைபேசி அழைப்பில், ஒரு மாணவர் அவரிடம் உதவி கேட்டார். அதற்கு, இந்த எண்ணை உனக்கு  தந்தது யார் என முகேஷ் கேட்க, என் ‘நண்பர் தந்தார்’ என மாணவர் பதிலளித்தார் மாணவர். ஆத்திரமடைந்த முகேஷ், ‘உன் நண்பனை அடிக்க வேண்டும் என்றார். அடுத்து, ‘உன் தொகுதி எம்.எல்.ஏ யார்’ என முகேஷ் கேட்டதற்கு அந்த மாணவர் ‘தெரியாது’ என்றார். இதனால் கோபமடைந்த முகேஷ், ‘எம்.எல்.ஏ யார் என்றே தெரியாத உன்னை துடைப்பத்தால் அடிக்க வேண்டும்’ என திட்டியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது காங்கிரஸ் சதி, இது குறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளேன். உதவி கேட்கும் மாணவர் எதற்காக பேச்சை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார் முகேஷ். பின்னர், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் மாணவரை சி.ஐ.டி.யூ அலுவலகத்துக்கு அழைத்து வந்து பேசினர். உள்ளே என்ன பேசப்பட்டது, சமாதானப்படுத்தப்பட்டாரா, மிரட்டினார்களா என யாருக்கும் தெரியாத நிலையில், அந்த மாணவர், திடீரென முகேஷின் பேச்சை நியாயப்படுத்தும் வகையில் பேட்டியளித்தார்.