இஸ்ரோவின், ‘தொலை உணர்வின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியில் பயன்பாடு’ என்ற தலைப்பில் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு வரும், 26 முதல், 30ம் தேதி வரை நடக்கிறது. இதில், 10, 11 மற்றும், 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ‘யூ டியூப்’ வாயிலாக நேரடி ஒளிபரப்பும் உண்டு. தினமும், காலை, 10:00 முதல், 10:45; மதியம், 12:00 முதல் 12:45 மணி வரை வகுப்பு நடைபெறும். மாணவர்கள், தங்களது தகவல் மற்றும் புகைப்படத்தை இஸ்ரோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் வழி படிப்பில் இணையலாம். இதற்கான சான்றிதழ் ஆகஸ்ட் 5ல் இஸ்ரோவால் வழங்கப்படும். இப்பயிற்சி, தொலை உணர்வு சார்ந்த ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.