சீன ஆதரவு ஊடகங்கள்

ஒரு தன்னார்வலர், அமெரிக்க நீதித் துறையில் தாக்கல் செய்த ஒரு ஆவணத்தின்படி, சீனா, அமெரிக்க நாளிதழ்கள், பத்திரிகைகளுக்கு விளம்பரம் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை அளித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது சீனாவின் உலகளாவிய ஆதிக்கம் செலுத்தும் முயற்சியாகவே கருதப்படுகிறது.

யாருக்கு எவ்வளவு?

சீன கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும், செய்தித்தாள் சீனா டெய்லி பத்திரிகை வாயிலாக விளம்பரம் என்ற பெயரில், கடந்த 6 மாதங்களில் மட்டும், டைம் இதழுக்கு 700,000 டாலர்கள், பைனான்சியல் டைம்ஸுக்கு 1 371,577 டாலர்கள், பாரின் பாலிசி இதழுக்கு 291,000 டாலர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸுக்கு 272,000 டாலர்கள், தி டெஸ் மொய்ன்ஸ் ரிஜிஸ்டருக்கு 34,600 டாலர்கள், சி.க்யூ-ரோல் 76,000 டாலர்கள் என வழங்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் தடைசெய்யப்பட்ட டுவிட்டருக்குகூட 265,822 டாலர் தரப்பட்டுள்ளது.

இவை மட்டுமா?

இந்த முன்னணி பத்திரிகைகள் மட்டுமல்ல, தி சியாட்டில் டைம்ஸ், தி அட்லாண்டா-ஜர்னல் கான்ஸ்டிடியூஷன், தி சிகாகோ ட்ரிப்யூன், தி ஹூஸ்டன் க்ரோனிகல் மற்றும் தி பாஸ்டன் குளோப் போன்ற பத்திரிகைகளுக்கும் விளம்பரம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டுள்ளது.

எதற்காக?

கொரோனா பரப்புதல், நாடு பிடித்தல், எல்லை ஆக்கிரமிப்பு என உலக அளவில் கெட்டு வரும் தன் பெயரை தூக்கி நிறுத்துவது, அந்த ஊடகங்கள் மூலம் அந்நாட்டு அரசுகளுக்கு மறைமுக அழுத்தம் கொடுப்பது. தங்கள் எண்ணத்தையும் கலச்சாரத்தையும் பரப்புவது, குறிப்பிட்ட பத்திரிகைகள் மூலம் அந்த நாட்டுக்கு எதிராக அவதூறு செய்திகள் பரப்புவது, கலகம் ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பது, இட்துசாரி சித்தாந்தத்தை பரப்புவது போன்றவற்றிற்காகவே சீனா இந்த முயற்சியை மேற்கொள்கிறது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாரதத்தில்:

சமீபத்தில்கூட தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, பா.ஜ.க குறித்தும் பிரதமே மோடி குறித்தும் அவதூறாக எழுத நமது நாட்டிலேயே ஆட்கள் தேடி விளம்பரம் செய்தது, சமீப காலமாக தி ஹிந்து நாளிதழ்கள் சீனாவின் விளம்பரங்களை முழுப்பக்க அளவில் வெளியிட்டு வருவது போன்றவை இங்கு நினைவு கூரத்தக்கது.

சுவாரஸ்யமாக, தி ஹிந்து வெளியிட்டுள்ள சீனாவின் விளம்பரம், பார்ப்பதற்கு வழக்கமான ஒரு அறிக்கையையும் போலவே தோன்றும். ஆனால், அதனை சற்று நெருக்கமாக ஆராய்ந்தால், அந்த முழு பக்க விளம்பரமும் சீனாவின் கருத்துத் திணிப்பாக இருப்பது நன்றாக விளங்கும்.

மதிமுகன்