உளவுத்துறை எச்சரிக்கை

ஜூன் 27 அன்று ஜம்முவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இரட்டை டிரோன் தாக்குதலுக்குப் பிறகு, உளவுத்துறை தற்போது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ‘தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளாவின் தெற்குப் பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா கையகப்படுத்திய பின்னர், கடலோர காவல்படை, இந்திய கடற்படைகளை உளவுத்துறை உஷார் படுத்தியுள்ளது என்பதும், ராணுவத் தலைவர் எம். எம். நாரவனே, பயங்கரவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் டிரோன்கள் எளிதில் கிடைப்பது குறித்தும், அது எவ்வாறு நாட்டில் பாதுகாப்பில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த கேரள காவல்துறைத் தலைவர் அனில் கான்ட், ‘டிரோன் தாக்குதலுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்களை முறியடிக்க, மாநிலத்தில் டிரோன் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார்.