கேரள மாநிலம், திரிச்சூர் மேயர் வி.கே. வர்கீஸ், அம்மாநில காவல்துறைத் தலைவரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார், அதில், தான் தனது அதிகாரபூர்வ வாகனத்தில் செல்லும்போது, காவலர்கள் தனக்கு சல்யூட் அடிப்பதில்லை. அவர்கள் என்னை அவமதிக்கின்றனர். இது குறித்து விசாரித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள், எம்.எல்.ஏ, அமைச்சர்களுக்குகூட சல்யூட் வைக்கின்றனர். எனக்கு வைப்பதில்லை. நாங்கள் மக்களை சந்தித்து அவர்கள் குறையை தீர்க்கிறோம், ஆனால், காவலர்கள் எங்களுக்கு முதுகைக் காட்டுகின்றனர் என அந்த புகாரில் புலம்பியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், ‘வழக்கமாக பின்பற்றப்படும் ஒரு நிலையான உத்தரவின்படியே காவலர்கள் சல்யூட் வைக்கின்றனர். ஆனால் அது கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறை அல்ல’ என்று தெரிவித்தனர்.