இந்திய விமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்திரி பொறுப்பேற்றுக் கொண்டார், அடுத்த வருடத்துடன் இவர் தனது தேசசேவைப் பணியில் 40 வருடத்தை நிறைவு செய்ய உள்ளார். பல்வேறு வகையான போர் விமானங்களில் சுமார் 3,800 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர். ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் சேஃப்டு சாகர் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். இதே போல இந்திய தரைப்படையின் துணை தளபதிகளில் ஒருவராக லெஃப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் குமார் ஷர்மா பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இந்திய தரைப்படையின் வான் பாதுகாப்பு கோர் பிரிவின் தலைவராக இருந்த லெஃப்டினன்ட் ஜெனரல் ஏ.பி.சிங் ஒய்வு பெற்றதையடுத்து அப்பதவியை லெஃப்டினன்ட் ஜெனரல் சுனில் பூரி கோஸ்வாமி ஏற்று கொண்டுள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் தற்போது இந்திய விமானப்படையின் தளபதியாக பதவி வகிக்கும் ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா அவர்கள் ஒய்வு பெற உள்ளார் என்பது கூடுதல் தகவல்.