பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓவால் ராணுவ பயன்பாட்டிற்காக குறைந்த நீளமுள்ள பாலம் அமைப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டது. 9.5 மீட்டர் நீளமுள்ள பள்ளம் போன்ற இடங்களில் பாலமாக இந்த அமைப்பை உபயோகிக்கலாம். இந்த பாலம் 4 மீட்டர் அகலம் இருக்கும். போர்க்காலங்களில் இந்த பாலத்தின் உதவியுடன் வீரர்கள், படைப்பிரிவுகள் வேகமாகவும் காலதாமதம் இன்றியும் இலக்கை நோக்கி பயணிக்கலாம். டாட்ரா 6×6 சேஸிஸ் வாகனத்தில் 5 மீட்டர் நீள எஸ்.எஸ்.பி.எஸ் அமைப்பு மற்றும் டாட்ரா 8×8 சேசிசில் 10மீ நீள எஸ்.எஸ்.பி.எஸ் அமைப்பு என இரு வகைகளில் இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுப்பாக 10மீ நீள எஸ்.எஸ்.பி.எஸ் அமைப்பு 12 என்ற எண்ணிக்கையில் படையில் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 102 அமைப்புகள் படையில் இணைக்கப்பட உள்ளன.