அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகிறது. அமெரிக்க படைகளை தொடர்ந்து ஜெர்மன் படைகளும் தற்போது தனது படைகளை திரும்ப பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆப்கன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 166 தாலிபன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்குள்ள மக்களும் தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தற்போது தங்களை காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர். தாலிபன்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பொதுமக்களுள் முகமது சலாங்கி என்பவரும் ஒருவர். பார்வின் மாகாணத்தை சேர்ந்த முகமது சலாங்கி தாலிபன்களுக்கு எதிராக தனது எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளார். தாலிபன்கள் எங்களுக்கு எதிராக போர் தொடுக்கும் பட்சத்தில் எங்களது ஏழு வயது மகன் கூட ஆயுதம் ஏந்தி போரிடுவான் என அவர் கூறியுள்ளார். சர்வதேச படைகள் எங்களை கைவிட்ட பிறகு எங்கள் நாட்டை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை என ஒரு மாணவர் கூறியுள்ளார்.