போலி தொலைபேசி இணைப்பகம்

கேரளாவின் காலிகட் மாவட்டத்தில், வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக மாற்றி வழங்கும் போலி டெலிபோன் எக்ஸ்சேஞ் நடத்திவருவது சம்பந்தமாக வந்த தகவலையடுத்து, புலனாய்வு நிறுவனமான ஐ.பி அம்மாவட்டத்தில் 4 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது, ​​960 சிம் கார்டுகளைக் கையாளக்கூடிய 30 சிம் பாக்ஸ் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜூரிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. முன்னதாக 2016ல், கேரளாவில் கடவந்திர என்ற இடத்தில் ஒரு போலி டெலிபோன் எக்ஸ்சேஞ் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு ஆட்டோஸ் இன்ஃபோடெக் என்ற நிறுவனம் இதே போன்ற முறைகேட்டில் ஈடுபட்ட்து கண்டறியப்பட்ட்து. சில வாரங்களுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த, இப்ராஹிம் புல்லாட்டில் என்பவர் பெங்களூருவில் போலி தொலைபேசி இணைப்பகம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.