மும்பையில் அடுத்தடுத்து போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பணமோசடி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன், குடியிருப்பு பகுதியில் மருந்து குப்பியில், மருந்துக்கு பதிலாக தண்ணீரை நிரப்பி தடுப்பூசி போட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, மும்பை சமதா நகரில் தனியாரால் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 4 நிறுவனங்களைச் சேர்ந்த 618 தொழிலாளர்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களில் யாருக்கும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை விசாரனையில், மணீஷ் திரிபாதி என்னும் மருத்துவர், கோகிலா பென் மருத்துவமனையில் முன்னாள் ஊழியர் ராஜேஷ் பாண்டே உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.