ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘அயோத்தியில் நிலம் வாங்குவதில் ஏந்த முறைகேடும் நடக்கவில்லை. அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் வளாகம் கட்டுவதில் இடையூறு விளைவிக்கும் நோக்கில் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. நிலம் வாங்குவதில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாகவே நடந்துள்ளன. உடுப்பி பெஜாவர் மடம் சுவாமி விஸ்வபிரசன்னா தீர்திஜி மகாராஜ், அறங்காவலர் காமேஷ்வர் சௌபால்,வழக்கறிஞர்கள், பட்டயக்கணக்காளர்கள் என அனைவரும் என்னுடன் இணைந்தே ஆவணங்களை ஆய்வு செய்தனர். குற்றம் சாட்டுபவர்களின் மனதில் இன்னும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் சுற்றியுள்ள சில நிலங்களை குறைந்த விலையில் அல்லது அறக்கட்டளை வாங்கிய விலையில் நிலங்களை வாங்க முயற்சிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.