லண்டனில், பருவநிலை நடவடிக்கைகள் குறித்து இந்திய சர்வதேச மன்றம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கலந்துகொண்டார் அப்போது அவர், ‘பருவநிலை நடவடிக்கைகளில் பாரதத்தின் உலகளாவிய அணுகுமுறை, வலுவான தனியார் துறைகளுடன் எங்கள் முயற்சிகளை மேலும் விரைவுபடுத்துவதற்கும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் உதவும் என நம்புகிறேன். மாற்றத்தை ஆதரிக்க தனியார் மூலதனத்தின் பங்கை அதிகரிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் குறிப்பாக சூரிய ஆற்றல் துறையில் பாரதம் வேகமாக முன்னேறி வருகிறது. இதில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உலகுக்கே முன் உதாரணமாக விளங்குகிறது’ என பேசினார்.