அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) ஒரு தொகுதி ஆய்வகமான ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (ஐ.ஐ.சி.டி) மற்றும் நோவ் லேப்ஸ் ஆகியவை இணைந்து கொரோனா எதிர்ப்பு மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2 டிஜி) மருந்தை மலிவு விலையில் மக்களுக்கு அளிக்கும் வகையில் தயாரிக்க ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) துணை அமைப்பான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (இன்மாஸ்) 2-டி.ஜி இந்த 2 டிஜி மருந்தஉருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கான இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலில் (டி.சி.ஜி.ஐ) அனுமதியை பெற்ற பிறகு நோஷ் லேப்ஸ் நிறுவனம், 2-டி.ஜி மருந்துகளை தயாரிக்கத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.