பட்டய கணக்காளர் தினம்

ஜூலை 1, தேசிய பட்டய கணக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பட்டயக் கணக்காளர் என்பவர் கணக்கீடு, கணக்காய்வு, முகாமைத்துவ கணக்கீடு, குத்தகை, கூட்டிணைப்பு, வாணிப சட்டம், நிதி முகாமைத்துவம், பொருளியல் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய விஷயங்கள் பற்றி சிறந்த அறிவுடைய கணக்கீட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் நிபுணர்.

தற்பொழுது பட்டய கணக்காளர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். பட்டயக் கணக்காளர்களுக்கு பொருளாதாரத்தை சீர்மை செய்யும் சிறப்பான பணி உள்ளது.

பட்டயக் கணக்காளர் என்பது உலகில் மிகவும் மதிப்புமிக்க படிப்புகளில் ஒன்று. அது ஒரு சவாலான படிப்பும்கூட. கடினமான தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும், எனவே ஒரு பட்டயக் கணக்காளராக ஆவது எளிதானது அல்ல. எனவேதான் நிதி மற்றும் தொழில் துறையில் பட்டய கணக்காளரின் தேவை இன்று உலக அளவில் மிக அதிகமாக உள்ளது.

சி.ஏ முடித்தவர்கள் ஒரு ஆடிட்டராக செயல்படலாம் அல்லது பெரிய நிறுவனங்களில் தலைமைக் கணக்காளர், உள் தணிக்கையாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகிக்கலாம். எனவே சி.ஏ படித்து முடித்தால் சிறப்பான எதிர்காலம் உண்டு.

 

ப. மகிரிஷன்