ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி என்பது மறைமுக வரியின் ஒரு வடிவம்.  இது இந்திய சந்தையை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. முழு நாட்டிற்கும் ஒரே வரியாக செயல்படும். உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு அனைத்து பொருட்கள், சேவைகளை வழங்குவதில் ஜி.எஸ்.டி பயன்படுத்தப்படும்.

ஜி.எஸ்.டி இந்தியாவில் வரி கட்டமைப்பை தரப்படுத்துவதற்கான ஒரு குறிக்கோளுடன் செயல்படுத்தப்படுகிறது.

ஜி.எஸ்.டி, நாடு முழுவதும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வது, நடுநிலை செயல்முறையாக மாற்றும். இது பொதுவான வரி விகித அமைப்பு. எனவே, எந்த இடத்திலும் வணிகத்தைத் தொடங்க அனைவரையும் அனுமதிக்கிறது.

இந்த வரிவிதிப்பு முறை, வரியின் அடுக்கு விளைவை நீக்குகிறது. இது, வணிகம் செய்வதற்கான மறைக்கப்பட்ட செலவுகளை குறைக்கிறது.

 ​​நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விகிதம் என்ற அமைப்பைக் கொண்டு, திறமையான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் ஆதரவுடன், வரிவிதிப்பு முறையை நிர்வகிக்கும் பணியை எளிமைப் படுத்துகிறது.

வரிகளில் ஒரு விரிவான சோதனை, அர்ப்பணிப்பு, தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுடன் தொடர்ந்து கண்காணித்தல் போன்றவை, வரிகளில் இணங்காதது எளிதில் பிடிபடுவதை உறுதி செய்கிறது.

ஆன்லைன் வரிவிதிப்பு முறை காரணமாக, வரி வசூலிக்கும் செலவும் கணிசமாகக் குறையும்.

 கருப்பு பணம், கள்ளச் சந்தை வியாபாரம் பெருமளவு குறைய வழி செய்தது இந்த வரிவிதிப்பு.

 

கோ. பழனிவேல்