ஐ.நா சபையில் பாரதம் எச்சரிக்கை

ஐ.நா சபையில், ‘பயங்கரவாதத்தால் உலகம் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்பு செயலர் வி.எஸ்.கே. கமுடி, ‘நவீன தொழில்நுட்பங்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சமூக வலைதளங்கள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தளங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதில் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை, ‘வீடியோ கேம்’ வழியாக, பயங்கரவாதிகள் பரப்பி வருகின்றனர். பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை புறக்கணிக்க வேண்டும். பயங்கரவாதம், ஒரு நாட்டுக்கான பிரச்னையல்ல, உலகிற்கே எதிரானது’ என தெரிவித்தார்.