காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, கூகுள், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், ‘டிஜிட்டல் தளங்களில் குடிமக்கள் உரிமைகளை பாதுகாத்தல், ஊடகங்களை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்தல், பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம்’ உள்ளிட்டவற்றில், அரசு வழிகாட்டுதலின்படி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை விசாரித்து வருகின்றன. கொரோனாவை முன்னிட்டு நேரடி விசாரனைக்கு வர மறுத்த முகநூல் அதிகாரிகள், நிலைக்குழுவின் எச்சரிக்கையை அடுத்து நேரில் ஆஜராகினர். இதில் கூகுள், முகநூல் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரிய விளக்கங்கள் அளித்தனர். ஆனால், டுவிட்டர், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, கேள்விகளுக்கு திருப்திகரமான விளக்கம் அளிக்கவில்லை என தன் அதிருப்தியை நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.