ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘திமுக பதவியேற்ற கடந்த 55 நாட்களில் தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான ரூ. 520 கோடிக்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது. கோயில் இடங்களில் உள்ள கடைகள் குறித்து மறுபரிசீலனை செய்து புதிதாக வாடகைக்கு விடப்படும். அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் தற்காலிகப் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என கூறினார். ஆனால், ‘கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம், கோயில் நிலங்கள் கோயிலுக்கே சொந்தம், அதற்கு பட்டா போட்டு தரக்கூடாது போன்றவை உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படியே நடக்கின்றன. இதில் தமிழக அரசின் பங்கு ஏதும் இல்லை. அவர்கள் உத்தரவை மட்டுமே செயல்படுத்துகின்றனர். ஆனால், தாங்களே ஏதோ முயன்று பெரிதாக சாதித்தது போல பாசாங்கு செய்கின்றனர்’ என இணையதளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகினனர்.