ஜம்மு காஷ்மீரில் சீக்கிய பெண்கள் சிலர் அங்குள்ள முஸ்லிம்கள், காதல் திருமணம், கடத்தல் என கட்டாய மதமாற்றம் செய்வது சில நாட்களுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்தது. இதில், அம்மாநில துணை நிலை ஆளுனர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரோமணி அகாலிதளத் தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா மற்றும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்.ஜி.பி.சி) அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மௌலானா ஆசாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அதிபர் ஜாபர் சரேஷ்வாலா, சீக்கிய சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை என உண்மையை மறைத்து பேசியுள்ளார். இதற்கு சீக்கிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.