கோயில்கள் – இ.பி.எஸ் கோரிக்கை

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை மீட்போம், கோயில் பணியாளர்களைப் பாதுகாப்போம் என்று வாயால் சொல்லும் ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுக்க உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதனால், திருக்கோயில்களுக்குத் தொடர்ந்து இழப்பு ஏற்படும். எனவே தமிழக அரசு, குறைந்த சம்பளத்தில் நீண்ட காலமாக தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருக்கோயில்களுக்கு வாடகை பாக்கி நிலுவை வைக்காதவர்கள் தொடர்ந்து அச்சொத்துகளில் வாடகைக்கு அனுமதிக்க வேண்டும். இதர ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்து, அச்சொத்துகளை அறநிலையத்துறை விதிகளின்படி ஏலம் விட்டு திருக்கோயில்களுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.