உய்குர் முஸ்லிம்களை வேட்டையாடும் சீனா

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்களை சொல்லொனா துயரத்திற்கு சீன கம்யூனிச அரசு ஆளாக்குகிறது என பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், உய்குர் மனித உரிமைகள் திட்டம் (யு.எச்.ஆர்.பி) மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஆக்சஸ் சொசைட்டி ஆகியவை நடத்திய ஒரு ஆய்வில், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கம்போடியா, துருக்கி, மியான்மர் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு தப்பிசென்ற உய்குர் முஸ்லிம்களை திருப்பி அனுப்ப சீனா நிர்பந்தித்துள்ளது. அந்த நாடுகளும் சீனாவின் அழுத்தத்திற்கு பணிந்துள்ளன. திரும்பி வந்தவர்களை சித்ரவதை முகாம்களில் அடைத்து கொடுமை செய்கிறது. அந்த நாடுகளில் தங்கியுள்ளோரை பல்வேறு வழிகளில் மௌனமாக்குகிறது என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.