பயங்கரவாத தேர்வு மையம் கேரளா

கேரள சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இருப்பவர் லோக்நாத் பெஹ்ரா. இவர் வரும் 30ம்தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் கேரளா ஒன்று. ஆனாலும் சில பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாக கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. மாவோயிஸ்ட்டுகள் திருந்துவதற்கு பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. காவல்துறையுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சில மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பல சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு கேரளா ஒரு தேர்வு மையமாக உள்ளது. கேரளாவில் டாக்டர்கள், இன்ஜினியர்கள் உட்பட படித்தவர்களை மூளை சலவை செய்து தங்கள் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கின்றனர். கேரளாவில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை என்றும் கூற முடியாது. கேரள காவல்துறையினர் பல பயங்கரவாத செயல்பாடுகளை முறியடித்துள்ளனர்’ என தெரிவித்தார்.