ஹிந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுப்புப் பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களில் ஆணையரது அனுமதியின்றி அறங்காவலர் குழு, தக்கார், நிர்வாகிகளின் தீர்மானங்களின் அடிப்படையில் பணியாளர்கள் எவரும் தற்காலிகமாக, தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில், ஊதிய விகித முறையில் நியமிக்கப்பட்டிருப்பின் அவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போதைய தேவைகளை கருதி அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆணையரின் அனுமதி விவரங்களை குறிப்பிட்டு புதிய பணியாளர் தொகுதிப் பட்டியலை அங்கீகாரம் பெற அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.