ராஜஸ்தானில் மக்ரானா பகுதியை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கிஷன்கர் நகராட்சியில் துப்புரவாளராக பணிபுரியும் ஒருபட்டியலின ஹிந்து இளைஞனும் காதலித்து திருமணம் செய்தனர். தங்கள் காதலை தன் வீட்டில் பிரித்துவிடுவார்கள், தங்களைக் கொன்றுவிடுவார்கள் என பயந்த அந்த பெண், தன் கணவனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண் மைனர் என்றும் அந்த திருமணத்தை தாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும் கூறி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பிரித்தனர். இதற்கு அங்கிருந்த காவலர்களும் உடந்தையாக இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் இதை வேடிக்கை பார்த்தனர். அந்த பெண் மறுத்ததால் வேறு வழியின்றி தம்பதியர் இருவரையும் கைது செய்து கணவனை காவல் நிலையத்திற்கும் அந்த பெண்ணை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர் காவலர்கள்.