இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை, சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டது. இந்த அறிக்கையின் மூலம், கடந்த அ.தி.மு.க அரசின் ஆட்சிக் காலத்தில், 2017-18, 2018-19 ஆகிய நிதியாண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் 34,374 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. தமிழகத்தில் மொத்தம் 75 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 68 செயல்படும் அரசு நிறுவனங்கள், 1 சட்டமுறைக் கழகம், 6 செயல்படாத அரசு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.