கேரளாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு வழிபாட்டு தலங்களை திறக்கவும் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறக்கப்பட்டன. குருவாயூர் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் ஒரு நேரத்தில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்திய திருவிதாங்கூர் தேவஸ்தானம், ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.