ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பகதர்கள் வழிபாடு செய்ய தமிழக அரசு தடைவித்துள்ளது. தற்போது தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. முக்கியமாக, மக்களை சீரழிக்கும் மதுபானக்கடைகள் திறக்க அனுமத்துள்ளது. ஆனால், மக்கள் மன அமைதிக்காகவும், வழிபாடு செய்யவும், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவும் செல்லும் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க மட்டும் அனுமதிக்காமல் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறந்து அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி ஹிந்து முன்னணியினர், கோயில்கள் முன்பாக கற்பூரம் ஏற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காரணமாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.