மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த ஹான் ஜுன்வேவை என்பவரை, சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) அதிகாரிகள் விசாரணை செய்தபோது, பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களை ஹேக் செய்ய சீனா முயற்சிக்கிறது. அமைச்சகம், பி.எஸ்.என்.எல், சில விண்வெளி நிறுவனங்கள், ஏஜென்சிகளும் அவர்களது இலக்குகளில் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். ஹான் ஜுன்வேவும் அவரது கூட்டாளிகளும் 1,300 இந்திய சிம் கார்டுகளை தங்கள் நாட்டிற்கு கடத்திச் சென்றுள்ளனர். அவற்றை ஹேக் செய்வதற்கும் நிதி மோசடிகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு இங்குள்ள கம்யூனிச, மாவோயிச, பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.