பாகிஸ்தான் குறித்து ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தான் குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில், பாரத வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ‘பாரதம் ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டிருக்காது. கடந்த பல ஆண்டுகளாக அண்டை நாட்டில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுகின்றனர். பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பாரதத்துடன் மறைமுகமாக மோதிவரும் பாகிஸ்தான், மறுபுறம் ஆப்கானிஸ்தானுடன் மோதிவருகிறது. தாலிபான் அங்கு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறது. சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு பாரதம் ஆதரவாக இருக்கும். பயங்கரவாதிகளின் சொர்கபுரியாகத் திகழும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு அமைதி நிலை நாட்டப்படும்.எங்கள் எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்று பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார்.