முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அளித்த பேட்டி ஒன்றில், ‘கல்வானில் பாரத வீரர்களுடன் நடந்த மோதலுக்குப் பிறகு, எல்லையில் சீன வீரர்கள் குவிப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, தங்களுக்கு மேலும் பயிற்சி தேவை, இன்னும் சிறந்த முறையில் தயாராக வேண்டும் என்பதை சீன வீரர்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பயிற்சி பெற்ற சீன வீரர்கள்தான் வந்துள்ளனர். அவர்களுக்கு, அப்பகுதிகளில் போரிட தேவையான பயிற்சிகள் இருந்திருக்காது. திபெத் மலைப்பிரதேசம். இங்கு, பணி செய்யும் முன்பு நன்றாக பயிற்சி இருக்க வேண்டும். நமது பாரதத்தில், மலைப்பகுதிகளில் அதிக பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கு, நமது வீரர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் நாம் தொடர்ந்து தங்கி செயல்பட்டுக்கொண்டு உள்ளோம். ஆனால், சீனா அப்படி அல்ல. சீனப்படைகளின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகளை நமது வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.