அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமபிரான் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் அரசியல் ஆதாயம் அடைய காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள், இக்கோயில் விஷயத்தில் பல பொய்யான குற்றச்சாடுகளை முன்வைத்து வருகின்றன. அவ்வகையில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளராக உள்ள வி.எச்.பி தலைவர் சம்பத் ராய் மீது உ.பி பிஜ்னோர் நகரைச் சேர்ந்த வினீத் நாராயண், அல்கா லஹோட்டி மற்றும் ரஜ்னீஷ் ஆகியோர் ஒரு பொய்யான நில அபகரிப்புப் புகாரை கூறினர். இதனால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது, 153 ஏ, 193, 295-ஏ, 448, 419, 417, 465, 487, 409, 470, 471, 504, 505 (1 ) (இ), 505 (2) & 507 மற்றும் 66 (ஈ), ஐடி சட்டம் 71 & 74 ஆகிய ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.