குறைந்ததா சிமெண்ட் விலை?

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் ஏற்கனவே கிமெண்ட் விலை 30 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் குறைந்து 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது. சிமெண்ட் விலை மூடைக்கு மேலும் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். கம்பியின் விலையும் 1100 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது’ என பெருமிதத்துடன் தெரிவித்தார். ஆனால், அவரின் அறிக்கைப்படி சிமெண்ட் விலை, ரூ. 435 ஆக குறையும் என சொல்கிறார். ஆனால் அதன் முந்தைய விலை 380. எனவே, சிமெண்ட் விலை உண்மையில் ரூ. 55 உயர்ந்துள்ளதே தவிர, பழைய விலைக்கு குறையவில்லை. இதே நிலைதான் கம்பி உள்ளிட்ட பொருட்களுக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.