குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி தலைமையில் புதிய பயணம் துவங்கியுள்ளது. நாடு முழுதும் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். பாரதம் போன்ற மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், இலவச தடுப்பூசி வழங்குவது என்பது மிகப்பெரிய முடிவு. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதம் முதல், தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது’ என கூறினார். முன்னதாக, ஜூன் 21 அன்று ஒரே நாளில் சுமார் 85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இது, கடந்த ஏப்ரல் 5ம் தேதியன்று செலுத்தப்பட்ட 43 லட்சம் டோஸ் என்ற சாதனை அளைவைவிட இரட்டிப்பு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.