பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, டோலோ நியூஸ் என்ற தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். நேர்காணலின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என்று அழைத்தை சுட்டிக்காட்டினார் செய்தியாளர். அதற்கு, ‘பிரதமர், அவர் சூழலில் இருந்து மேற்கோள் காட்டினார். ஆனால், ஊடகங்கள் அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டது’ என்று கூறினார் குரேஷி. மேலும், இது குறித்து குரேஷியின் நிலைப்பாட்டை அந்த செய்தியாளர் கேட்டபோது, ‘நான் அதற்கு பதில் அளிக்க மாட்டேன்’ என கூறிவிட்டார் குரேஷி.