ஷைலஜா டீச்சருக்கு விருது

ஜார்ஜ் சோரஸ் நிதியுதவியின் கீழ் இயங்கும் சென்ட்ரல் யூரோப்பியன் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகம் முன்னாள் கேரள சுகாதார அமைச்சரான ஷைலாஜா டீச்சருக்கு கொரோனா சேவையை பாராட்டி விருது வழங்கியுள்ளது. பொது சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் அவர் செயல்பட்டார் என கூறி, அவருக்கு ‘ஐடியல்ஸ் ஆப் ஏன் ஓப்பன் சொசைட்டி’ என்ற விருதினை வழங்கியுள்ளது. பெரும் கோடீஸ்வரர், தீவிர இடதுசாரி ஆதரவாளர், பாரத அரசியல் உட்பட பல நாடுகளின் அரசியலில் தேவையின்றி மூக்கை நுழைப்பவர், அதற்காக பெரும் பணம் செலவிடுபவர், அரசியல் ஸ்திரத்தன்மையை குலைத்து ஆதாயம் தேட முயல்பவர் என அறியப்படுபவர் ஜார்ஜ் சோரஸ் என்பதும், ஷைலாஜா டீச்சர் அமைச்சராக இருந்தபொழுது, பாரதத்தில் கொரோனா தொற்றில் முதலிட்த்தில் மகாராஷ்டிராவும், கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்விருது அரசியல் ஆதாயத்திற்காக தரப்பட்டது என்பதே உண்மை என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.