அசாமில் கரையும் காங்கிரஸ்

அசாமில், காங்கிரஸ் சார்பில் நான்கு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியத் தலைவர்களில் ஒருவரான ரூப்ஜோதி குர்மி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரும் 21ல் அவர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறார். இதனால், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்த ரூப்ஜோதி குர்மி, ‘சட்டமன்றத் தேர்தலில் பத்ருதீன் அஜ்மலுடனான கூட்டணி காங்கிரசின் ஆபத்தான முடிவு. ராகுல் ஒரு திறமையற்ற அரசியல்வாதி, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ராகுல் ஏற்க முடியாது. காங்கிரஸ் தனது இளைய தலைவர்களை தொடர்ந்து புறக்கணிக்கிறது. நாடு முழுவதும் கட்சியின் நிலைமை மோசமடைந்து வருகிறது’ என தெரிவித்தார். விரைவில், அம்மாநில முக்கிய காங்கிரஸ் தலைவர்களான பங்கஜ் போர்போரா, அங்கிதா தத்தா, ஜூரி சர்மா போர்டோலோய் போன்றோரும் காங்கிரசை கைகழுவ உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.