தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள் கொரோனா நோயாளிகளுக்கான பராமரிப்பு மையம் நடத்தி வருவதை குறித்து அமைச்சரின் கருத்தைக் கேட்டார். அதற்கு அமைச்சர் கூறிய பதில் “முதலமைச்சர், கொரோனா நிவாரண பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அது இப்பொழுது நடந்துள்ளது” என ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குறித்து தனது நிலைப்பாட்டினை எடுத்துரைத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குறை கூறிய தி.மு.கவினரே தங்களது தவறை உணர்ந்து , ‘அது ஒரு உன்னத மக்கள் இயக்கம், மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறது’ என ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே இது உணர்த்துகிறது.