இடதுசாரி பத்திரிகையாளர் மீது புகார்

தி வயர்’, ‘கேரவன்’ போன்ற இடதுசாரி சார்பு ஊடகங்களுடன் தொடர்புடையவர் பத்திரிகையாளர் நேஹா தீட்சித். இவர் தனது டுவிட்டர் பதிவில், ஆர்.எஸ்.எசின் துணை அமைப்பான சேவா இன்டர்நேஷனல் அமைப்புக்கு வெளிநாட்டினர் உட்பட யாரும் நிதியளிக்க வேண்டாம். அவர்கள் ‘குழந்தை கடத்தலில் ஈடுபட்டனர் என பொய்யாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து பத்திரிகையாளர் நேஹா தீட்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் முன்னதாக, 2016ல் ‘தி அவுட்லுக்’ என்ற பத்திரிகையிலும் ஆர்.எஸ்.எஸ் குறித்து தவறாக எழுதியுள்ளார். உ.பி. ம.பி உட்பட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்தும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.